மீண்டும் பாலாவுடன் பணியாற்ற ஆசை! - விக்ரம்

|


சேது, பிதா மகன் என இரு படங்கள்... தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு உயர்த்திய படங்கள். அதன் பிறகு பாலாவும் விக்ரமும் பேசிக் கொண்டாலும், சேர்ந்து பணியாற்றவில்லை.

இப்போது, மீண்டும் பாலாவுடன் இணைந்தால் நன்றாக இருக்கும் என பீல் பண்ணுவதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

இப்போது விக்ரம் கைவசம் இரு படங்கள் உள்ளன. அதில் ஒன்று தமிழ்.. தாண்டவம். மற்றொன்று இந்தி... டேவிட். இரண்டாவது படத்தில் அவருடன் ஜீவாவும் நடிக்கிறார்.

இந்தப் படங்களை முடித்துவிட்டு பாலாவிடம் போகும் வாய்ப்புள்ளதாக விக்ரம் கூறினார்.

இடையில் அவரும் ஷங்கரும் இணைவதாகக் கூறப்பட்டது. இதை ஷங்கர் மறுக்கவில்லை. ஆனால் விக்ரம் மறுத்துவிட்டார். எனவே தனது இரு படங்கள் முடிந்ததும் மீண்டும் பாலாவுடன் விக்ரம் கைகோர்க்கக் கூடும் என்று தெரிறது.

இதற்கிடையே தாண்டவம் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ள சீயான் விக்ரம் அங்கு தனது பிறந்த நாளை நேற்று படக்குழுவுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார்.
 

Post a Comment