பச்சை என்கிற காத்து அரசியல் கதையா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : 'அ' திரை நிறுவனம் தயாரித்துள்ள படம், 'பச்சை என்கிற காத்து'. வாசகர் ஹீரோ, தேவதை ஹீரோயின். அப்புக்குட்டி, துருவன், பரத்குமார், மருதை, சத்யபாமா, துளசி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். அன்பு ஸ்டாலின் ஒளிப்பதிவு. ஹரிபாபு இசை அமைத்திருக்கிறார். படத்தை எழுதி இயக்கியுள்ள கீரா கூறியதாவது:
மணப்பாறை அருகே வாழ்ந்து இறந்துபோன 27&வயது இளைஞனின் உண்மை கதை இது. ஒரே இரவில் தொடங்கி ஒரே இரவில் முடிகிறது. தனக்கு எது பிடிக்கிறதோ, அதை மட்டுமே சரியென்று எண்ணி வாழும் ஒருவன், அவன் தேர்ந்தெடுத்த அரசியலாலும், காதலியாலும் எப்படி சீரழிகிறான் என்பதை சொல்கிறோம். இது அரசியல்வாதியாக ஆசைப்பட்ட ஒருவனின் கதை. ஆனால் அரசியல் கதை அல்ல.
பச்சை ராம்குமார் என்ற அந்த இளைஞன் வாழ்ந்த, பழகிய அதே மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இறந்துபோன பச்சையை பற்றி ஏழு பேர் கதை சொல்லுவது போல இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அவரவர் கோணத்தில், பிளாஷ்பேக் ஆக காட்சிகள் விரியும். படத்தை ஸ்ரீராம் மூவிமேக்கர்ஸ் சார்பாக முத்துக்கிருஷ்ணன் வெளியிடுகிறார். வரும் 13ம் தேதி வெளிவருகிறது.




 

Post a Comment