பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள 'வழக்கு எண் 18/9' படம், அடுத்த வாரம் ரிலீசாகிறது. இதில் ஹீரோயின்களாக மனீஷா யாதவ், ஊர்மிளா மகந்தா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். நிருபர்களிடம் மனீஷா கூறும்போது, ''20 முறைக்கு மேல் ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்த பிறகு இந்தப் படத்துக்கு இயக்குனர் தேர்வு செய்தார். படத்தில் மிதுன் முரளி ஜோடி. பிளஸ் டூ மாணவியாக நடிக்கிறேன். இதையடுத்து தெலுங்கில் எம்.எஸ்.ராஜு தயாரித்து, இயக்கும் 'துனிஹா துனிஹா' படத்தில், அவர் மகன் சுமந்த் அஸ்வின் ஜோடியாக நடிக்கிறேன்'' என்றார்.
ஊர்மிளா மகந்தா கூறும்போது, ''பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் பயிற்சி பெற்றேன். கோவா பிலிம் பெஸ்டிவல் நடந்தபோது, பாலாஜி சக்திவேலை சந்தித்தேன். இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வீட்டு வேலைக்காரி வேடம். வசனங்கள் குறைவு. நடிப்புக்கு நிறைய ஸ்கோப் உள்ள கேரக்டர். சிறப்பாக நடித்துள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறினார்கள்'' என்றார். பேட்டியின்போது ஸ்ரீ, மிதுன் முரளி, பாலாஜி சக்திவேல் உடனிருந்தனர்.

Post a Comment