நடிப்புக்காக எதையும் செய்ய தயார் என்று நடிகர் கிருஷ்ணா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இதற்கு முன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் 'கழுகு'தான் என்னை அடையாளம் காட்டியது. கழுகு மக்களிடம் போய் சேர்ந்ததற்கு முதல் காரணம் யுவனின் இசை. அடுத்து இயக்குனர் கதை சொன்ன விதம், அடுத்துதான் என் நடிப்பு. அழுக்கான கேரக்டர்களில் மட்டும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். அப்பாவே தயாரிப்பாளர் என்பதற்காக பத்துபேரை அடிக்கிற ஆக்ஷன் ஹீரோவாக நடித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நல்ல நடிகனாக பெயர் எடுக்க வேண்டும் என்பதே ஆசை. நடிப்புக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். 'கழுகு' படத்தில் கதாநாயகியை தொட்டுக்கூட நடிக்க வில்லை. அடுத்த படம் எல்லா அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சகப் படமாக இருக்கும். 'கழுகு'க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. எல்லா கேரக்டர்களிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.
Post a Comment