பழைய பாணியில் கதைகள் சொன்னால் எடுபடாது என்றார் இயக்குனர் பவித்ரன். இது பற்றி 'மாட்டுத்தாவணி' பட இயக்குனர் பவித்ரன் கூறியது: 'வசந்தகால பறவைகள்', 'சூரியன்', 'இந்து', 'ஐ லவ் இந்தியா' படங்களை இயக்கியபோது இருந்த டிரெண்ட் மாறிவிட்டது. இப்போது யதார்த்தமான படங்கள்தான் எடுபடுகிறது. 'காதலில் சொதப்புவது எப்படி?','ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற படங்களின் திரைக்கதைகள் மாறுபட்டு அமைக்கப்பட்டிருந்ததால் அது வரவேற்பு பெற்றுள்ளது. நான் இயக்கியுள்ள 'மாட்டுத் தாவணிÕ இப்போதைய டிரெண்டில்தான் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் சில காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் ரீ ஷூட் செய்யப்பட்டது. 'களவாணி' விமல், சதீஷ், ராம், சூரி ஆகியோருடன் ஹீரோயின் ஜூலியட் நடித்திருக்கிறார். பொறுப்பில்லாமல் சுற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து சொல்லப்பட்டிருக்கிறது. மதுரை பின்னணியிலான இக்கதை முழுக்க மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சுற்று வட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தேவா இசை. விரைவில் ரிலீஸ் ஆகிறது.
Post a Comment