பெப்சி அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்

|

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
சின்னத்திரையிலும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள பெப்சி நிர்வாகம், தங்கள் முடிவை  வாபஸ் பெற வேண்டும் என்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ராதிகா சரத்குமார் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிளாலர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) ஏற்பட்டுள்ள பிரச்னையை தொடர்ந்து, 7ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய, பெப்சி அறிவித்துள்ளது. அத்துடன் வரும் 10-ம் தேதி முதல் சின்னத்திரை தயாரிப்பு தொடர்பான வேலைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெப்சி நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவு ஏற்கனவே 'சின்னத்திரை தயாரிப்பளர்கள் சங்கத்துடன், எந்த சூழ்நிலையிலும் வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம்' என்ற ஒப்பந்த விதிக்கு எதிரானது. பெப்சிக்கும், சின்னத்திரை தயாரிப்பளர்களுக்கும் இடையே எந்தபிரச்னையும் ஏற்படாத சூழலில் இந்த அறிவிப்பு சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இன்னல்களையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதனால் பல தயாரிப்பாளர்கள் வெளி நபர்களை வைத்து வேலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். எனவே, அவசர கதியில் பெப்சி எடுத்த வேலை நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவை உடனடியாக வாபஸ்  பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

Post a Comment