பெரியப்பா அழகிரி பாராட்டினார்... ஸ்டாலின் மகன் உதயநிதி மகிழ்ச்சி

|


OK OK Movie
மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே நிழல் யுத்தம் நடந்து வந்தாலும் அடுத்த தலைமுறையை அது பாதிக்கவில்லை என்பது கருணாநிதி குடும்பத்தினருக்கு நிச்சயம் மகிழ்ச்சியான விஷயம்தான். ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை மு.க.அழகிரி பாராட்டியுள்ளாராம். இதை உதயநிதியே மகிழ்ச்சியுடன் கூறியுளள்ளார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டுள்ள படத்தில் உதயநிதியே ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது தொடங்கப்பட்ட இந்தப் படம் அதிமுக ஆட்சிக்காலத்தில் சமீபத்தில் வெளியானது. ராஜேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். காமெடியைப் பெரும் பலமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வெற்றிகரமாக ஓடி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் மதுரை வந்த உதயநிதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தாத்தா படத்தைப் பார்த்து விட்டு பத்து படங்களில் நடித்ததைப் போன்ற நடிப்பைக் காட்டியிருக்கிறாய் என்று பாராட்டினார்.

பெரியப்பா மு.க.அழகிரி இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. இருப்பினும், படம் நல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் நல்லாயிருக்கு என்கிறார்கள். நீ நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்லுறாங்க. சந்தோசமா இருக்கு என்று பாராட்டினார் என்றார் உதயநிதி.

பெரியப்பாவின் பாராட்டைப் பெற்று விட்ட சந்தோஷம் உதயநிதியின் முகத்தில் காணப்பட்டதைப் பார்க்க முடிந்தது.
 

Post a Comment