'ராணாவின் முதல்பகுதிதான் கோச்சடையான்!' - கே எஸ் ரவிக்குமார்

|


K S Ravikumar
ராணாவின் முதல் பகுதிதான் இப்போது கோச்சடையானாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், "படுவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது கோச்சடையான். சௌந்தர்யா மிகச் சிறப்பாக படத்தை உருவாக்கி வருகிறார்.

ஒருவகையில், ராணாவின் முதல் பாகம்தான் கோச்சடையான்.

ராணா கைவிடப்பட்டதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை. அந்தப் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அதற்கான வேலைகள் கோச்சடையானுக்குப் பின் தொடரும்," என்றார்.

ரஜினி உடல்நலம் குன்றியதால் ராணாவுக்குப் பதில், கோச்சடையானை ஆரம்பித்தனர். இப்போது அந்தப் படம் முடியப் போகிறது. அடுத்து கோச்சடையான்தான் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் ரவிக்குமார்.

கோச்சடையான் மனதில் என்ன இருக்கிறதோ!
 

Post a Comment