கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா நடித்த ஹிட் படமான 'கோ', நாகி ரெட்டி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் தயாரிப்பாளரும், விஜயா மருத்துவமனை நிறுவனருமான நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழா பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் மக்களை வெகுவாகக் கவர்ந்த ஜனரஞ்சகமான படங்களுக்கு விருதும் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விருதுக்கு ஏராளமான திரைப்படங்கள் அனுப்பப்பட்டன. இயக்குநர் கே.பாக்யராஜ், பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி ஆகியோர் தலைமையிலான நடுவர் குழு போட்டிக்கு வந்த படங்களைத் தேர்வு செய்தது.
அவற்றுள் எல்ரெட் குமார் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' சிறந்த ஜனரஞ்சகத் திரைப்படத்துக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது.
காமராஜர் அரங்கில் மே 1-ம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவுக்கு ஏவி.எம்.சரவணன் முன்னிலை வகிக்கிறார். கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு, நடிகை நதியா ஆகியோர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள். விழாவில் உன்னி மேனனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
"கோ' படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ.1.50 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.