சசிகுமார் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் 'சுந்தரபாண்டியன்'!

|


Sasikumar
நாடோடிகள், போராளி படங்களுக்குப் பிறகு, அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக எம் சசிகுமார் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன்.

இந்தப் படத்தை இயக்குபவர், சசிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரபு.

சசிகுமாரின் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் லட்சுமி மேனன். இவர் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி, சூரி உள்பட பலரும் நடிக்கின்றனர். ரகுநந்தன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை தயாரிக்கப் போவது வேறுயாருமில்லை... சசிகுமாரேதான். தனது கம்பெனி புரொடக்ஷன் சார்பில் இந்தப் படம் உருவாகிறது.

பிரபு சொன்ன கதை அந்த அளவு பிடித்துப் போனதால் தானே நடித்து, தயாரிக்கவும் முன்வந்தாராம் சசிகுமார். தேனி மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் முழுப் படப்பிடிப்பும் நடக்கிறது.
Posted by: Shankar
 

Post a Comment