மலையாள படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க மோகன்லால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்.டி.வாசுதேவன் நாயரின் பிரபல நாவலை தழுவி மலையாளத்தில் படம் இயக்குகிறார் ஹரிஹரன். மலையாளம் தவிர தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இரு ஹீரோ கதை கொண்ட இப்படத்தில் மோகன்லாலுடன் கமல்ஹாசன் நடிக்க வேண்டும் என்பது ஹரிஹரனின் விருப்பம். இரு ஆண்டுகளுக்கு முன் இப்படம் பற்றி பேசும்போது இருவரும் நடிக்க சம்மதித்திருந்தனர். இதற்கிடையே Ôஉன்னைப்போல் ஒருவன்Õ படத்தில் கமல்ஹாசன் கேட்டதால் மோகன்லால் நடித்தார். இதன் பின் ஹரிஹரனின் படத்தில் இணைந்து நடிப்பது தொடர்பாக இருவருமே ஆர்வம் காட்டவில்லை. இதனால் பட ஷூட்டிங் தள்ளிப்போயிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் இதில் கமலுடன் நடிக்க மோகன்லால் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இரு நடிகர்களுக்கு இடையே என்ன பிரச்னை என்பது தெரியவில்லை என பட வட்டாரங்கள் தெரிவ¤த¢தன. இந்நிலையில் பட ஹீரோக்களை மாற்ற ஹரிஹரன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி ஹரிஹரன் கூறுகையில், ÔÔநாவலை படமாக்குவது எளிய காரியமல்ல. நாவலை சினிமாவுக்குரிய பாணியில் மாற்ற திரைக்கதை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடிக்கும் ஹீரோக்கள் உள்பட வேறு எந்த நடிகரையும் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. காரணம், யார் நடிக்கிறார்கள் என்பதையே இன்னும் முடிவு செய்யவில்லைÕÕ என மழுப்பலாக பதிலளித்தார்.
Post a Comment