தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஜோடி போட்டு நடனம் ஆடாததால் தனுஷ் மீது பாய்ந்துள்ளார் பாலிவுட் ஹீரோயின் ராக்கி சாவந்த். பாலிவுட்டில் அவ்வப்போது பிரச்னைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்துபவர் ராக்கி சாவந்த். இவர் மும்பை நிகழ்ச்சியொன்றில் தனுஷுடன் மேடையில் தோன்றி 'ஒய் திஸ் கொல வெறி டி' பாட்டுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. முதலில் நடனம் ஆட ஒப்புக்கொண்ட தனுஷ் திடீரென்று ஆட மறுத்துவிட்டார். விழாவுக்கும் செல்லவில்லை. இதனால் ராக்கி சாவந்த் கோபம் அடைந்தார். தனுஷுடன் இணைந்து ஆடவேண்டும் என்ற கூறியதால்தான் ஒப்புக்கொண் டேன். இதற்காக பலமுறை ஒத்திகையில் ஈடுபட்டேன். இவ்வளவு கஷ்டமும் இப்போது வீண் ஆகிவிட்டது. அவர் வராமல் ஏமாற்றி விட்டார் என்று கூறி தனுஷை திட்டி தீர்த்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தனுஷிடம் கேட்டபோது, '3' படம் ரிலீசுக்காக நான் சென்னையில் இருக்க வேண்டி இருந்தது. எனவேதான் ராக்கி சாவந்த் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றார். ஆனால் தனுஷ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு வேறு காரணம் கூறப்படுகிறது. '3' படத்தில் நடித்தபோது ஸ்ருதி ஹாசனுடன் காதல் மலர்ந்தது என்றும், அவருடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் வதந்தி பரவியது. இதனால் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருந்த தனுஷ் வீணாக மற்றொரு சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 'ராக்கி சாவந்துடன் சேர்ந்து ஆடினால் புதிய பிரச்னையில் சிக்கிக்கொள்வீர்கள்' என்று மேனேஜர் எச்சரித்ததால் அவருடன் ஆடுவதை தனுஷ் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.


 

Post a Comment