கிசு கிசு - ஜோடியின் பிளான்

|

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

எப்போ பிரதரை ஹீரோவாக்கப்போறீங்கன்னு பாக்க¤றவங்க எல்லாரும் தாஸ் இயக்கத்தை கேக்குறாங்களாம்... கேக்குறாங்களாம்... Ôஸ்கிரிப்ட் ரெடி, இயக்கம் ரெடி, ஹீரோயின் ரெடி, ஷூட்டிங்தான் பாக்கிÕன்னு பதில் சொல்லி நழுவிட்டிருந்தாராம். இப்போ சத்தமில்லாம பிரதர் பட ஷூட்டிங்கை தொடங்கிட்டாராம். படம் முடிஞ்சி ரிலீஸுக்கு தயாராகுற வரை இதுபத்தி யார்கிட்டேயும் மூச்சுவிடக்கூடாதுன்னு பிரதருக்கும், இயக்கத்துக்கும் கண்டிஷன் போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்... அதுக்கு காரணம், இந்த படம் ஒரு வெளிநாட்டு படத்தோட உல்டாவாம்... உல்டாவாம்...

நயன ஹீரோயின், நடன இயக்கம் விரிசல் உண்மை கிடையாது. ஜோடியே தங்களுக்குள்ள போட்ட பிளான்தான்னு கோலிவுட்ல பேசுறாங்களாம்... பேசுறாங்களாம்... ஹீரோயினோட பேங்க் பேலன்ஸ் சர்ருன்னு இறங்கிப்போச்சாம்... இறங்கிப்போச்சாம்... அதை ஏத்துறதுக்கு ஒரே வழி ரீஎன்ட்ரிதான்னு முடிவு பண்ண¤னாராம். ஜோடிபோட்டுகிட்டு சுத்துனா சான்ஸ் வராதுன்னு டிசைட் பண்ண¤னவங்க, காதல் முறிவுன்னு சொல்லி பிரிஞ்சா நிறைய வாய்ப்புகள் வரும்னு கணக்கு போட்டாங்களாம்... போட்டாங்களாம்... அதன்படியே நடந்ததால ஜோடிக்கு சந்தோஷமாம். அதனாலதான் நயனம், பச்சை குத்தின நடனத்தோட பெயரை அழிக்க விரும்பலேன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...

இனிய நடிகை ரெண்டுங்கெட்டான் நிலைல இருக்காராம்... இருக்காராம்... டாப் இயக்கம்னு ஒட்டுமொத்தமா பாரதி கிங் இயக்கத்துக்கு கால்ஷீட் கொடுத்தாராம். இதனால இடைல வந்த படங்களை ஏத்துக்கலையாம். திடீர்னு  கிங் இயக்கம் தன்னை படத்துலேயிருந்து தூக்கிட்டதால அழாத குறையா முழிக்கிறாராம்... முழிக்கிறாராம்... வேற வழியில்லாம யாராவது குறைச்ச சம்பளத்துக்கு டேட் கேட்டாலும் ஓகே சொல்ல ரெடியா இருக்காராம்... இருக்காராம்...


 

Post a Comment