பாலிவுட் ஹீரோ நிபந்தனை லிங்குசாமிக்கு புது தலைவலி

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சாஹித் கபூர் நிபந்தனை விதித்ததால் வசனகர்த்தா மாற்றப்பட்டார். மாதவன், ஆர்யா நடித்த படம் 'வேட்டை'. லிங்குசாமி இயக்கினார். இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நடிக்க மாதவன், அசின் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களை அணுகியபோது கால்ஷீட் தர மறுத்துவிட்டனர். இந்நிலையில் சாஹித் கபூர் ஒப்பந்தம் ஆனார். ஸ்கிரிப்ட் பணி முடிந்து ஷூட்டிங் செல்லும் நேரத்தில் திடீரென்று சாஹித் நிபந்தனை விதித்தார். 'தமிழில் எழுதப்பட்ட வசனங்களை அப்படியே இந்திக்கு மொழி பெயர்த்திருப்பதை ஏற்க முடியாது. இந்தி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வசனத்தை மாற்றினால்தான் நடிப்பேன்' என்றார். இதனால் லிங்குசாமிக்கு புது தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து இந்தி படங்களுக்கு வசனம் எழுதும் பிரசூன் ஜோஷி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகே சாஹித் நடிக்க ஒப்புதல் அளித்தார்.

இதுபற்றி லிங்குசாமி கூறும்போது,''எனக்கு இந்தியில் மற்றவர்களுடன் எளிதாக தொடர்புகொண்டு பேச தெரியாது. இந்நிலையில்தான் தமிழ் வசனங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. அது திருப்தியாக அமையவில்லை. இதுதான் முக்கிய பிரச்னையாக இருந்தது. இதையடுத்து மற்றொரு வசனகர்த்தாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் தமிழ் படத்துக்கு வசனம் எழுதியவருடன் அமர்ந்து ஆலோசித்து வசனத்தின் உட்பொருளை கேட்டறிந்து அதற்கேற்ப வசனம் எழுதினார். இதையடுத்து பிரச்னை தீர்ந்தது. இதற்குமுன் நான் இந்தி படம் இயக்கியதில்லை. இது புது அனுபவம் என்பதால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறேன். இந்தி 'வேட்டை' தமிழிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். சர்வதேச மார்க்கெட்டுக்கு ஏற்ப இது உருவாகும். ஆர்யா நடித்த வேடத்தில் சாஹித் நடிக்கிறார். மாதவன் நடித்த வேடத்தில் பாகிஸ்தான் இசை அமைப்பாளர் அலி நடிக்கிறார். ஹீரோயின் இலியானா'' என்றார்.


 

Post a Comment