கோடை விடுமுறைக்கு ஸ்டார் நடிகர் படங்கள் எதுவும் இம்முறை ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு கோடை விடுமுறை நாட்களிலும் முன்னணி நடிகர் படங்கள் வருவது வழக்கம். பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் கோடையில் முன்னணி நடிகரின் எந்த படம் வந்தாலும் அந்த படம் சுமாராக இருந்தாலே வசூலை அள்ளிவிடும். ஆனால் இம்முறை பெரிய நடிகரின் படங்கள் எதுவும் வரவில்லை. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தேக்கம் ஏற்பட்டுள்ளது. இளம் நடிகர்கள், புதுமுகங்கள் நடித்த படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகின்றன. கோடையில் வெளியாகும் பெரிய படங்கள் கூடுதல் வசூல் குவித்திருக்கிறது. இது நடிகர்களின் ஸ்டார் அந்தஸ்தை கூட்டவும் உதவியது. 1999ல் ரஜினியின் 'படையப்பாÕ, 1996ல் கமலின் 'இந்தியன்Õ மற்றும் விஜய் நடித்த 'கில்லிÕ, விக்ரமின் 'சாமிÕ, சூர்யாவின் 'அயன்Õ போன்ற படங்கள் வசூலை அள்ளிக் குவித்தன. இந்த கோடையில் கமலின் 'விஸ்வரூபம்Õ, அஜித்தின் 'பில்லா 2Õ, 'மாற்றான்Õ, 'சகுனிÕ போன்ற படங்கள் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் திரையுலகில் தயாரிப்பாளர்பெப்சி மோதல¢ காரணமாக ஸ்டிரைக் நடந்ததால் 1 மாத காலம் ஷூட்டிங் தடைபட்டது. இதனால் திட்டமிட்டபடி படங்களை முடிக்க முடியவில்லை. இதையடுத்து ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 'கடந்த வருடங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் படங்களின் வசூல் பாதித்தது. இம்முறை அதனால் பாதிப்பு இல்லை. ஐபிஎல் சீசன் நடக்கும் இந்த நேரத்தில் தியேட்டரிலும் கூட்டம் இருக்கிறது' என வினியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
Post a Comment