'கலகலப்பு' படத்தில் சிவா ஜோடியாக நடித்துள்ளார் ஓவியா. இதே படத்தில் அஞ்சலியும் நடித்துள்ளார். இருவருமே போட்டிப்போட்டு கிளாமராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஓவியா கூறியதாவது: யாரையும் போட்டியாக நினைத்ததில்லை. என்னுடன் நட்பாக இருப்பவர்களுடன் நட்பாக இருப்பேன். 'கலகலப்பு' படத்தில் பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்திருக்கிறேன். கிளாமராக நடிப்பது தவறு இல்லையே. இதுவரை அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கிறது. இது நான் நடித்துள்ள பக்கா கமர்சியல் படம். சிவாவுடன் இணைந்து காமெடியும் செய்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும்.
Post a Comment