கேரள காட்டு பகுதியில் மணிரத்னம் முகாம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனது அடுத்த படத்துக்காக இயக்குனர் மணிரத்னம் கேரளா காட்டு பகுதிகளில் முகாமிட்டிருக்கிறார். விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடித்த 'ராவணன்Õ படத்தை கேரள காட்டுபகுதிகளில் படமாக்கினார் மணிரத்னம். அதேபோல் தற்போது இயக்கி வரும் 'கடல்Õ பட ஷூட்டிங்கையும் கேரள காட்டுபகுதி மற்றும் கடற்கரை பகுதிகளில் நடத்த திடீரென திட்டமிட்டிருக்கிறார். இந்த திடீர் திட்டம¤டுதலுக்கு காரணம், கோலிவுட்டில் தற்போது ஸ்டிரைக் நடப்பதுதான். இதனால் படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மணிரத்னம் சில தினங்களுக்கு முன்பு கேரளா புறப்பட்டு சென்றார். அங்குள்ள அடர்ந்த காட்டுபகுதிகளில் பட குழுவினருடன் சென்று லொகேஷன் தேர்வு செய்தார். கடந்த சில வாரங்களாக தமிழக கடற்கரை பகுதிகளில் கார்த்திக் மகன் கவுதம் மற்றும் சமந்தா, அர்ஜுன், அரவிந்தசாமி, பசுபதி ஆகியோர் நடித்த காட்சிகளை படமாக்கிய மணிரத்னம் முக்கிய காட்சிகள் சிலவற்றை கோட்டயம் மற்றும் கொச்சியில் படமாக்கினார். பெப்சி, தயாரிப்பாளர் பிரச்னை முடிவுக்கு வந்து படப்பிடிப்புகள் தொடங்கிய பிறகு கேரளா வில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்து ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.


 

Post a Comment