சென்னை, : தமிழில், 'குறும்பு', 'போராளி' படங்களில் நடித்துள்ள அல்லரி நரேஷ், அடுத்த ஆண்டில் திருமணம் செய்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'குறும்பு' ரிலீசுக்கு பிறகு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தது. ஏற்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு 'போராளி'யில் நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது ஷாம், ராஜுசுந்தரத்துடன் சேர்ந்து 'ஏஸ் ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்' படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் 'ஆக்ஷன்' என்ற பெயரில் உருவாகிறது. எனக்கு ஜோடி, நீலம். திருமணத்துக்கு வீட்டில் பெண் பார்க்க சொல்லிவிட்டேன். அடுத்த ஆண்டில் திருமணம் நடக்கும்.
Post a Comment