தமிழ் - தெலுங்கு மட்டும்தான், இந்தி இல்லை! - கவுதம் மேனன்

|


Goutham Menon
நீதானே என் பொன்வசந்தம் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமே உருவாக்கப் போவதாகவும், இந்தியில் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குநர் கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராவதாக அறிவிக்கப்பட்ட படம் 'நீதானே என் பொன்வசந்தம்'.

தமிழில் ஜீவா, தெலுங்கில் நானி, இந்தியில் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடித்து வந்தார்கள். மூன்றிலுமே நாயகியாக சமந்தா நடித்து வந்தார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கெளதம் மேனன் தற்போது 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இந்தி பதிப்பை கைவிட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கான 'ஏக் தீவானா தா' படத்தின்தோல்விதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

நீதானே என் பொன் வசந்தத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்து, அதன் ரிசல்டைப் பொறுத்து இந்தியில் வெளியிடப் போவதாகக் கூறப்படுகிறது.
Posted by: Shankar
 

Post a Comment