நல்ல படம், மாணவர்களும் பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் என்று அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வழக்கு எண் 18/9-க்கு வரி விலக்கு தந்தால் நன்றாக இருக்கும் என அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி கூறினார்.
படத்தின் வெற்றிவிழா சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய இயக்குநர் லிங்குசாமி,
வழக்கு எண் 18/9 படத்துக்கு யு.ஏ. சான்றிதழ் அளித்துள்ளனர். இதற்காக ரிவைசிங் கமிட்டிக்குப் போக முடிவு செய்தோம். ஆனால் ரிலீஸ் நெருங்கிவிட்டதால் வெளியிட்டுவிட்டோம். இப்போது 30 சதவீதம் படத்துக்கு வரியாகவே போகிறது. இது தரமான படம் என்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள். பெற்றோரும் மாணவர்களும் பார்க்க வேண்டிய படம் என மீடியா பரிந்துரைத்துள்ளது.
துளி ஆபாசமோ, விரசமோ இல்லை. அனைத்து வகையில் சிறந்த படமான வழக்கு எண்ணுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கு இதனை உங்கள் மூலம் கோரிக்கையாக வைக்கிறேன்," என்றார்.
கருணாநிதி காலத்தில் படத்தின் தலைப்பு தமிழில் இருந்தால் வரிவிலக்கு தரப்பட்டு வந்தது. ஆனால் ஜெயலலிதா முதல்வரான பிறகு, படத்தின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும், யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment