இன்று 2 தமிழ் - 2 தெலுங்கு டப்பிங் படங்கள் ரிலீஸ்!

|

Friday Releases Tamil Movie
இந்த வெள்ளிக்கிழமை இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இரண்டுமே சிறிய பட்ஜெட்டில் உருவானவை.

முதல் படம் கண்டதும் காணாததும். புதிய இயக்குநர் சீலன் இயக்கியுள்ள படம். அவரே தயாரிப்பாளர். நடித்தவர்கள் அனைவருமே புதுமுகங்கள்.

மது, காமம், களவு இந்த மூன்றும் உண்மைக் காதலை, நட்பை எப்படிச் சிதைத்துவிடுகிறது என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். தமிழகம் முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்துள்ளனர்.

இன்று வெளியாகும் இன்னொரு படம் ராட்டினம்.

கேஎஸ் தங்கசாமி இயக்கத்தில், மதன் தயாரிப்பில் வந்துள்ள இந்தப் படமும் முற்றிலும் புதியவர்கள் நடித்ததுதான். ஒரு முகத்தைக் கூட இதற்கு முன் திரையில் பார்த்திருக்க முடியாது.

இளம் வயதுக் காதல், அதைத் தொடரும் பிரச்சினைகள், அந்தக் காதல் எந்த அளவு உறுதியானது என்பதை இந்தப் படத்தில் ரொம்ப இயல்பாகச் சொல்லியிருக்கிறார்.

படம் வெளியாகும் முன்பே நல்ல 'டாக்' கிளம்பியிருப்பதால், ஓரளவு எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது.

இந்த ஒரிஜினல் படங்களுடன் இரண்டு டப்பிங் படங்களும் வெளியாகின்றன. அவற்றில் முக்கியமானது பாலகிருஷ்ணா - நயன்தாரா நடித்த ஸ்ரீராமராஜ்யம். இன்னொன்று ஹன்சிகா- சித்தார்த் - ஸ்ருதி நடித்த ஸ்ரீதர்.

ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள டிபார்ட்மென்ட் இந்திப் படமும், ஹாலிவுட் படமான ப்ளாக் ட்ராகனும் இன்று வெளியாகின்றன.
Close
 
 

Post a Comment