2014-ல் இந்திய சினிமா மதிப்பு 5 பில்லியன் டாலர்களைத் தொடும்! - அமெரிக்க நிறுவனம் கணிப்பு

|

Partnership With Hollywood Boost Indian Film Industry 153406
சென்னை: இந்திய சினிமாவின் மதிப்பு 2014-ல் 5 பில்லியன் டாலர்களைத் தொடும் என இந்தியாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் எர்னஸ்ட் அண்ட் யங் தெரிவித்துள்ளது.

இந்திய சினிமாவின் தற்போதைய வர்த்தக மதிப்பு 3.2 பில்லியன் டாலர் ஆகும்.

எர்னஸ்ட் அண்ட் யங்க் நிறுவனம் உலக அளவில் வர்த்தகம் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் இந்திய சினிமா குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் ஹாலிவுட்டுடன் சேர்ந்து இயங்கினால் இந்திய சினிமா துறை மேலும் விரைவாகவும் பெரிய அளவிலும் வளர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், தற்போது இந்திய சினிமா துறையின் வளர்ச்சி 14 .1 சதவீதமாக இருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சினிமா தற்போது பொழுதுபோக்கு, விஷுவல் எபெக்ட், பயணம், மற்றும் சுற்றுலா, மற்றும் சினிமா கல்வி என பல துறைகளாக பரிணமிக்கிறது. இவ்வாறு வளர்ந்து வரும் சினிமா துறை ஹாலிவுட்டுடன் இணைந்தால் இதன் வளர்ச்சி மேலும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமா துறை தற்போது சீனா, ஜப்பான், ரஷ்யா, மற்றும் பிரேசில் ஆகிய நாட்டு சினிமாத் துறையோடு போட்டி போட்டு வருவதாகவும், மேலும் 2010 மற்றும் 2011 ம் ஆண்டுகளில் ஹாலிவுட் சினிமாக்கள் இந்தியாவில் படப்பிடிப்பு 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Post a Comment