22 ஆண்டுகள் கழித்து இணையும் பாரதிராஜா, கங்கை அமரன்

|

Bharathiraja Gangai Amaran Pair Up After 22 Years
பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்திற்கு இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார்.

பாரதிராஜா தற்போது எடுக்கும் படம் அன்னக்கொடியும், கொடிவீரனும். இந்த படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கிறார். ராதாவை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய பாரதி ராஜா தற்போது தனது படத்தில் ராதாவின் மகன் கார்த்திகாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இன்னொரு கதாநாயகியாக இனியா நடிக்கிறார்.

இந்த படத்திற்கு இளையராஜா அல்லது ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பாரதிராஜா புதுக் கூட்டணியாக ஜி.வி. பிராகஷிடம் இசையமைக்கும் பொறுப்பை கொடுத்துள்ளார். இந்த படம் முதலில் முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. படத்தின் நாயகிகள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டனர். பின்னர் பெப்சி பிரச்சனையால் ஷூட்டிங் பாதித்தது.

இப்பொழுது தான் அந்த பிரச்சனைகள் அடங்கியுள்ளன. இந்நிலையில் பாரதிராஜா படத்தின் பணிகளில் பிசியாகிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியரான கங்கை அமரன் பாடல்கள் எழதுகிறார். அவர் ஏற்கனவே பாடல் எழுதும் பணியைத் துவங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.

கடந்த 1990ம் ஆண்டு பாரதிராஜாவின் என்னுயிர் தோழன் படத்திற்கு கங்கை அமரன் பாடல் எழுதினார். அதன் பிறகு 22 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அவர்கள் இருவரும் இணைந்து பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

Post a Comment