6 ம் ஆண்டில் விஜய் டிவி அவார்ட்ஸ் : தமிழகத்தை வலம் வரும் ரசிகன் எக்ஸ்பிரஸ்

|

6th Annual Vijay Awards 2012 Vijay
விஜய் டிவியின் விஜய் விருதுகள் விழா 6ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது. இதற்கான தொடக்க விழா கடந்த 27ம் தொடங்கியது விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனத்தை ஏவிஎம் சரவணன், நடிகர் சிவகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இந்த ஆண்டு ரசிகன் எக்ஸ்பிரஸ் முற்றிலும் மாறுபட்ட வடிவில் நடிகர் நடிகையர்களின் புகைப்படம் தாங்கி தமிழ்நாடு முழுவதும் வலம் வருகிறது.

கடந்த 2006 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி, 6ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாகவும், புதுமாதிரியாகவும் நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் தொடக்கமாக ரசிகன் எக்ஸ்பிரஸ் வாக்குகளைத் தாங்கி தமிழகம் முழுவதும் வலம் வரத் தொடங்கியுள்ளது. இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனத்தில் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட விருது வழங்கும் புகைப்படங்கள் மற்றும் பங்குகொண்ட கலைஞர்களில் படங்கள், படக்காட்சிகள் என்று மக்கள் விரும்பிப்பார்க்கும் அனைவரது விஷயங்களும் அடங்கியுள்ளனவாம். சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், குமரி வரை சென்று அங்குள்ள ரசிகர்களின் வாக்குகளை சேகரித்து திரும்பும்

மக்களின் விருப்பமான திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், பாடல் ஆகிய ஐந்து பிரிவுகளை நேயர்களே தேர்வு செய்வர். மீதமுள்ள பிரிபிரிவுகளுக்கான விருதுகளை விழா நடுவர்கள் தேர்வுசெய்வர்.

விஜய் விருதுகளைப் பொறுத்தவரையில் முக்கிய விருதுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவது வரவேற்கப்படும் விஷயமாகும். ஆறாம் ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விழாவில் தமிழ்த்திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என்று ஏராளமான விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது விழாவில் தமிழ்த்திரைப்படத்துறையில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியின் விருது விழா கடந்த 2006 ம் ஆண்டு முதல் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்காக விஜய் விருதுகள் விழா பிரம்மாண்டமாக சென்னையில் ஜூன் 25ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று விஜய் டிவி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Close
 
 

Post a Comment