பாங்காக்கிலிருந்து வந்த நயனதாராவிடம் சென்னை சுங்க அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை

|

Customs Officials Grill Nayanathara

பாங்காக் போய் விட்டு வந்த நடிகை நயனதாராவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நிறுத்தி வைத்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நயனதாரா இடையில் ஏற்பட்ட 2 காதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் பிசியாக நடிக்க ஆரம்பித்துள்ள அவர் தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் அவரும் அவரது மேனேஜர் ராஜேஷ் மற்றும் மேக்கப் மேனுடன் பாங்காக் போயிருந்தார்.அங்கு போன வேலையை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் நயனதாராவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் ராஜேஷை தனியாக கூட்டிச் சென்று இன்னொரு அறையில் வைத்து விசாரித்தனர். அவர்களின் சூட்கேஸ்களையும் முழுவதுமாக சோதனையிட்டனர். முக்கால் மணி நேரம் நயனதாராவிடம் விசாரணை நடந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முக்கால் மணி நேர விசாரணைக்குப் பின்னர் வியர்க்க விறுவிறுக்க நயனதாரா வெளியே வந்தார். அவரது மேனேஜரையும் அதிகாரிகள் விடுவித்து விட்டனர்.

நயனதாராவின் பாங்காக் பயணம் குறித்துத்தான் விசாரணை நடந்துள்ளதாக தெரிகிறது. அவர் குறித்து யாரேனும் சுங்கத்துறையினருக்கு வேண்டும் என்றே தகவல் கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் பிரபுதேவாவை காதலித்த காலத்தில் தனது கையில் பிரபுதேவா என்று பச்சை குத்தி வைத்திருந்தார் நயனதாரா. தற்போது அதை அழிக்க முடியாமல் கடுமையாக சிரமப்படுகிறார். இதற்காகவே அவர் பாங்காக் போயிருந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

மொத்தத்தில் நயனதாராவுக்கு இந்த நாள் நிச்சயம் நல்ல நாளாக அமையாமல் கசப்பான நாளாக மாறி விட்டது உண்மை.

 

Post a Comment