ஹீரோக்களின் நண்பனாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று காமெடி நடிகர் சூரி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் அறிமுகமானேன். இதில் வரும் எனது பரோட்டா காமெடி இன்றும் பேசப்படுகிறது. அடுத்து தொடர்ந்து நடித்த படங்கள் என்னை ரசிகர்களிடம் நன்றாக அடையாளம் காட்டியுள்ளன. நான்கு பேரில் ஒருவனாக வந்து காமெடி செய்துகொண்டிருந்தேன். அப்படி காமெடி செய்யும் போது சில நேரங்களில் நமக்குள் இருக்கும் முழுத் திறமைகளும் வெளியே தெரியாமல் போய் விடுகிறது. இப்போது ஹீரோக்களின் நண்பனாக பல படங்களில் நடித்து வருகிறேன். இதை எனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இதற்காக என் இயக்குனர்களுக்கு நன்றி. இப்போது எழில் இயக்கியுள்ள 'மனம் கொத்திப் பறவை', வின்சென்ட் செல்வா இயக்கும், 'துள்ளி விளையாடு', சசிகுமாரின் 'சுந்தரபாண்டியன்' உட்பட பல படங்களில் நடித்து வருகிறேன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான வேடங்கள். அந்தந்த படங்கள் ரீலிஸ் ஆகும் போது வித்தியாசத்தை பார்க்கலாம். இவ்வாறு சூரி கூறினார்.
Post a Comment