'கோ' படத்தில் நடித்தவர் கார்த்திகா. நடிகை ராதா மகள். அவர் கூறியதாவது: அம்மா ராதா 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். கடின உழைப்பால் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தார். முன்னணி இடத்தில் இருக்கும் ஒரு நடிகை திடீரென்று நடிப்பிலிருந்து விலகுவது எளிதான விஷயம் இல்லை. ஆனால் எனது அம்மா குடும்பத்துக்காக நடிப்புக்கு முழுக்கு போட்டார். இதற்காக அவர் எப்போதும் வருத்தப்பட்டதில்லை. திரையுலகில் எனது அம்மா நல்ல மதிப்பை பெற்று வைத்திருக்கிறார். ஆனால் என்னுடைய வேலையில் ஒருநாளும் தலையிட்டது கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என்னுடன் வருகிறாரா, எனது பட விவகாரத்தில் தலையிடுகிறாரா என கேட்கிறார்கள். அவர் ஒருபோதும் என்னுடன் ஷூட்டிங்குக்கு வந்ததில்லை. எனது பட விஷயத்திலும் தலையிடுவதில்லை. சினிமாவில் நான் நடிக்க வந்தபிறகு ராதாவின் மகள் என்பதைவிட இயக்குனர்களின் மகளாகிவிட்டேன் என்றுதான் கூற வேண்டும். இதுபற்றி ராதா கூறும்போது, 'Ôஎன் மகளுக்கு வழிகாட்டவோ, குருவாக இருக்கவோ எனக்கு அவசியம் இல்லை. இப்போது காலம் மாறிவிட்டது. இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கைபற்றி அவர்களே முடிவெடுக்கிறார்கள். என்னுடைய சினிமா பின்னணி அவருக்கு உதவியாக இருக்கிறது. ஆனால் திரையுலகில் நிலைத்திருப்பது அவளது பொறுப்பு. அவள் திரையுலகில் முன்னணி இடத்தை பிடிப்பார்" என்றார்.
Post a Comment