கேப்டன் டிவியில் மக்கள் பிரச்சனையைத் தீர்க்க வரும் குட்டி பத்மினி

|

Kutti Padmini Manathodu Pesungal
இப்பொழுதெல்லாம் வீட்டுப் பிரச்சனையை வீதிக்கு கொண்டு வருவதை இந்த ஊடகங்கள் தெளிவாக செய்கின்றன. அந்த புண்ணியத்தை விஜய், ஜீ தமிழ், வரிசையில் கேப்டன் டிவியும் செய்து கொண்டிருக்கிறது.

நடிகை லட்சுமி, நிர்மலா பெரியசாமி வரிசையில் குட்டி பத்மினியும் பொதுமக்களின் சொந்தக் கதை, சோகக் கதைகளை லைவ் ஆக கேட்டு அதற்கு தீர்வு சொல்ல முயற்சி செய்கிறார்.

சின்னத்திரையில் நெடுந்தொடர்கள் மூலம் கலைசேவை புரிந்த குட்டி பத்மினி மனதோடு பேசுங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

ஞாயிறுதோறும் இரவு ஒன்பது மணிக்கு ‘மனதோடு பேசுங்கள்’ ஒளிபரப்பாகிறது. இதில் கிரியேட்டிவ் ஹெட் மற்றும் நிகழ்ச்சி நடத்துனர் என்ற இரட்டை சுமை குட்டி பத்மினிக்கு. இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு ரசிகர்களிடம் சென்றடைகிறது என்பது போகப் போகத் தான் தெரியும்.
 

Post a Comment