மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ நிகழ்ச்சியை தற்செயலாக காண நேரிட்டது. இது ஆரம்பத்தில் கொஞ்சம் நகைச்சுவையான நிகழ்ச்சியாக இருந்தாலும் இப்பொழுது கொஞ்சம் வில்லங்கமான நிகழ்ச்சியாக மாறிவருகிறதோ என்று நேயர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
புதன்கிழமை மாலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு கல்லூரி மாணவி சிக்கினார். நிகழ்ச்சி தொகுப்பாளர் அந்த பெண்ணிடம் கேட்ட கேள்வி கொஞ்சம் சிக்கலானதுதான். தொகுப்பாளரோ கல்லூரியில் உங்கள் ஆசிரியருக்கு நீங்கள் வைத்திருக்கும் பட்டப்பெயர் சொல்லுங்களேன் என்று கேட்டதுதான் தாமதம் அதற்கு அந்த மாணவி சற்றும் தயங்காமல் “ பப்பர் வாயன்” என்று கூறிவிட்டு அதற்கு விளக்கம் வேறு அளித்தார். அதாவது ஆசிரியர் வாயைத் திறந்து பேசினாலே சப்பாத்திக்கு மாவு பிசைவது போல இருக்குமாம் அதற்குத்தான் பப்பர் வாயன் என்று நாம கரணம் சூட்டியதாக தெரிவித்தார். இன்னொரு ஆசிரியருக்கு “நூடுல்ஸ் மண்டையன்” என்று பெயர் சூட்டியுள்ளனராம். அவரது முடி சுருட்டையாக இருப்பதால் இந்த பெயராம் ( இது எப்படி இருக்கு). இதை டிவியில் கூறிவிட்டு நாளைக்கு எந்த தைரியத்தில் அந்தப் மாணவி கல்லூரிக்கு போவாரோ தெரியவில்லை.
அதேபோல் இன்னொரு பெண்மணியிடம் “ உங்கள் கணவருக்கு நீங்கள் சமைக்கும் உணவில் மிகவும் பிடித்தது என்று கேட்டார். அதற்கு அவரோ சிக்கன் என்று கூறினார்.பிடிக்காத உணவு என்று கேட்ட உடன் ‘ உப்புமா’ என்று கூறினார். வாரத்துக்கு எத்தனை நாள் சிக்கன் செய்வீங்க? உப்புமா செய்வீங்க என்று கேட்டு அவரையும் சிக்கலில் மாட்டிவிட்டார்.
நிகழ்ச்சியின் சுவாரஸ்திற்காகத்தான் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன என்றாலும் பங்கேற்பாளர்களை பாதிக்காத கேள்விகளை கேட்கவேண்டும் என்பதே பெரும்பாலான நேயர்களின் எதிர்பார்ப்பாகும்.