அப்போ அடுத்த சிம்ரன், இப்போ அடுத்த சாவித்ரி.. எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த 'கீரோயின்'!

|

Sj Surya Introduces Another Savithri In Kollywood
'இசை' படத்திற்காக 'அடுத்த சாவித்ரியை' அழைத்து வந்துள்ளாராம் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் எஸ்.ஜே. சூர்யா.

இயக்குனர், நடிகர் எஸ்.ஜே. சூர்யா இசை படம் மூலம் இசையமப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரது வாலி, நியூ படங்களில் நடித்த சிம்ரன் திருமணமாகி செட்டிலானவுடன் தனது அ, ஆ படத்திற்கு அலைந்து, திரிந்து நிலாவை அழைத்து வந்து 'கீரோயினாக' (இப்படித்தான் கோலிவுட்டில் பலர் சொல்லித் திரிகிறார்கள்) அறிமுகப்படுத்தினார். அவர் தான் அடுத்த சிம்ரன் என்றார். ஆனால் நிலா ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் கள்ளக்காதல், கொலை வழக்கில் சிக்கினார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா தானே இயக்கி, இசையமைத்து, நடிக்கும் 'இசை' படத்திற்காக பெருநகரங்களில் எல்லாம் அலைந்து கடைசியாக சுலக்னா என்பவரை அழைத்து வந்துள்ளார். முதல் படத்திலேயே சுலக்னா நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறாராம். அதனால் அவரை அடுத்த நடிகையர் திலகம் சாவித்ரி என்றே கூறலாம் என்கிறார் சூர்யா. பட போஸ்டரில் கூட 'எஸ்.ஜே.சூர்யா- எஸ்.சாவித்திரி இணைந்து கலக்கும்’ என்று தான் போடப்போகிறாராம்.

சுலக்னா அடுத்த சாவித்ரியாவாரா அல்லது காணாமல் போவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படி இசையமைக்கும் வினோத ஆசை எப்படி வந்தது என்று கேட்டதற்கு, உங்களால் இசையமைக்க முடியும் என்று என்னுள் இருந்த இசையமைப்பாளரை வெளியே கொண்டு வந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்றார். ரஹ்மான் காரணமில்லாமல் சொல்லி இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார் சூர்யா.
Close
 
 

Post a Comment