'கதை' படத்தை அடுத்து அபிஷேக் இயக்கும் படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி அபிஷேக் கூறியதாவது: மும்பையில் பணியாற்றும் நேர்மையான போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்திய கதை இது. உண்மை கதை போன்றதுதான் என்றாலும் கமர்சியலாகச் சொல்கிறேன். அதிகமான போலீஸ் கதைகள் வந்திருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டு இது இருக்கும். சமுத்திரக்கனி என் நண்பர். கதையை கேட்டுவிட்டு கண்டிப்பாக நடிக்கிறேன் என்றார். அவர் தவிர்த்து இன்னொரு இளம் ஹீரோவும் நடிக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நானும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறேன். படத்தின் தலைப்பு மற்றும் பிற டெக்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை. இவ்வாறு அபிஷேக் கூறினார்.
Post a Comment