நடிகைகளை பிரிக்க சதி செய்கிறார்கள்: திவ்யா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நட்பாக இருக்கும் ஹீரோயின்களை சதி செய்து பிரித்து விடுகின்றனர் என்றார் திவ்யா. கடந்த 2 வருடத்துக்கு முன்புவரை கன்னட படவுலகில் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர் திவ்யா, ஆண்டிரிட்டா ராய். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பரம எதிரிகளாகி பிரிந்தனர். பேசுவதையும் நிறுத்தி கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் இருவரும் பங்கேற்றனர். விருது பெறுவதற்காக திவ்யா வந்திருந்தார். நிகழ்ச்சியில் ஆண்டிரிட்டா ராயின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. திவ்யா நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு ஆண்டிரிட்டா நடனம் ஆடினார். அப்போது உடன் ஆடிய நடன பெண்கள் திவ்யாவை மேடைக்கு அழைத்து வந்து தங்களுடன் ஆடும்படி கேட்டனர். அவரும் அதை ஏற்று நடனம் ஆடினார். பிறகு ஆண்டிரிட்டாவை கட்டித்தழுவி வாழ்த்து கூறினார்.

ஆண்டிரிட்டா பேசும்போது,''எதிர்பாராத வகையில் நாங்கள் இருவரும் மனக்கசப்பினால் பேசாமல் இருந்தோம். தற்போது இணைந்தது மகிழ்ச்சி. இதற்கு மேலும் எங்களை பிரிப்பதற்கு யாரும் கதைகட்டியோ, வதந்தியோ பரப்ப முடியாது'' என்றார். ஆண்டிரிட்டா பேச்சை கேட்டு கண்கலங்கிய திவ்யா,''நட்பாக இருப்பவர்களை திரையுலகில் இருக்கும் சிலர் சதி செய்து பிரிக்கப் பார்க்கிறார்கள். அது சில நேரம் நடந்துவிடுகிறது. ஆண்டிரிட்டாவும் நானும் அவ்வளவு நெருங்கிய தோழிகளாக இருந்தோம். எங்களை பிரித்துவிட்டனர். அவரிடம் பேசி பல நாள் ஆகிவிட்டது. மீண்டும் தோழிகள் ஆகியிருப்பது சந்தோஷம்'' என்றார்.


 

Post a Comment