ஷில்பா மகனோட பெயர் 'பேபி கே'...!

|

After Baby B It Is Baby K Bollywood   
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது மகன் பெயரை பேபி கே என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்கள் பண்ணும் அலும்புக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் ஐஸ்வர்யா ராய் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து அதை இன்று வரை உலகின் பார்வைக்கு காட்டாமல் வைத்துள்ளார். குழந்தை என்னவோ நவம்பரி்ல் பிறந்தாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அதன் பெயர் ஆராத்யா என்று தாத்தா அமிதாப் பச்சன் தெரிவித்தார்.

அது வரை குழந்தையின் பெயர் தெரியாமல் ஊடகங்கள் முதலில் பேபி பி என்றும், அதன் பிறகு பேட்டி பி என்றும் அழைத்து வந்தன. ஒரு வழியாக குழந்தையின் பெயர் ஆராத்யா என்பதை ஊடகங்கள் கண்டுபிடித்தும் அதை பச்சன் குடும்பத்தார் உறுதிபடுத்தாமலேயே இருந்து வந்தனர். இந்த கூத்து முடிந்த நிலையில் அடுத்த கூத்து ஆரம்பித்துள்ளது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று முன்தினம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தான் தாயான சந்தோஷத்தை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதோடு தங்களுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் தனது மகனின் பெயரை பேபி கே என்று குறிப்பிட்டுள்ளார். ஷில்பாவின் கணவர் பெயர் ராஜ் குந்த்ரா. அதனால் தான் குழந்தையின் பெயர் பேபி கே.

இவராவது சீக்கிரம் குழந்தைக்கு பெயர் வைத்து அதை நமக்கு சொல்வாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Close
 
 

Post a Comment