விஜய் - அஜீத்தை வைத்து நினைத்தாலே இனிக்கும் ரிமேக்கா?

|

Director Selva Denies Ninaithale Inikkum Remake
ரஜினி - கமல் நடித்த சூப்பர் ஹிட் படமான கே பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்குநர் செல்வா ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் விஜய்யும் அஜீத்தும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ரஜினி, கமல் திரையுலக வரலாற்றில் ஒரு மியூசிகல் ஹிட்டாக அமைந்தது இந்த நினைத்தாலே இனிக்கும். கதாநாயகியாக ஜெயப் பிரதா நடித்தார். எம்எஸ் விஸ்வநாதன் இசையில் அத்தனைப் பாடல்களும் காலத்தை வென்று இன்றும் இனிமையாக ஒலிக்கின்றன.

இந்தப் படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இதில் விஜய், அஜித் ஆகியோர் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது.

நினைத்தாலே இனிக்கும் ரீமேக்கை செல்வா இயக்க உள்ளதாகவும் செய்தி பரவியது. செல்வா ஏற்கனவே அமராவதி படம் மூலம் அஜித்தை அறிமுகம் செய்தவர். ஜெமினி கணேசனின் நான் அவனில்லை படத்தை ரீமேக் செய்து வெளியிட்டார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது.

இதையடுத்து நினைத்தாலே இனிக்கும் படத்தையும் அவர் ரீமேக் செய்ய உள்ளதாகவும் அஜித்தையும் விஜய்யையும் சந்தித்து இது குறித்து பேசி உள்ளதாகவும் வதந்திகள் பரவின.

ஆனால் செல்வா இந்த செய்திகளை மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "நினைத்தாலே இனிக்கும் படத்தை ரீமேக் செய்யும் திட்டமில்லை. அப்படி நான் நினைத்திருந்தால்தானே விஜய், அஜித்திடம் பேச... அந்தப் படம் ஒரு க்ளாஸிக். அதை ரீமேக் செய்வது சரியாக இருக்காது," என்றார்.
Close
 
 

Post a Comment