விஜய் இயக்க, விஜய் நடிக்கும் தலைவன்!

|

Vijay Vijay Join Hands Thalaivan   
தமிழ் சினிமாவில் இரண்டு விஜய்கள் இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நடிகர் விஜய். இன்னொருவர் இயக்குநர் ஏ எல் விஜய்.

இந்த இருவருமே இதுவரை எந்தப் படத்திலும் சேர்ந்து பணியாற்றியதில்லை.

அந்தக் குறையைப் போக்கும் வகையில் இப்போது ஒரு புதுப் படத்தில் இருவரும் இணைகிறார்கள்.

தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தை பிரபல சினிமா பைனான்ஸியர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.

விஜய் தற்போது துப்பாக்கியில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கவுதம் மேனனுடன் யோஹன் படத்தில் பணியாற்றுகிறார்.

அடுத்தது விஜய் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு வருகிறார். இந்த ஆண்டு இறுதியில், நவம்பர் அல்லது டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Post a Comment