'வழக்கு எண்' பார்த்த ரஜினி.. 'ஓகே. ஓகே'. பார்த்த கமல்!

|

Rajini Watches Vazhakku Enn 18 9
தமிழ்த் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினியும், கமலும் சமீபத்தில் இரு முக்கியப் படங்களைப் பார்த்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் வசூலிப்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் இவை.

சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை கமல்ஹாசன் பார்த்து வெகுவாக ரசித்தாராம். படத்தின் இயக்குநர் ராஜேஷை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சனிக்கிழமையன்று இன்னொரு ஹிட் படமான வழக்கு எண் 18/9 படத்தை போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் பார்த்து ரசித்துப் பாராட்டினார்.

படத்தைப் பார்த்து முடித்த பி்ன்னர் பிரமாதமாக வந்திருப்பதாக தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குச்சாமியிடம் கூறினாராம் ரஜினி. மேலும் படத்தின் நாயகன் உள்ளிட்ட குழுவினரையும் வெகுவாக பாராட்டினாராம்.

அதை விட முக்கியமாக இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்த முத்துராமன் என்ற புதுமுக நடிகரை கூப்பி்ட்டுப் பாராட்டிய ரஜினி, இது உங்களுக்கு முதல் படமா என்று கேட்டுள்ளார். அவரும் ஆமாம் என்று கூறி என்னை ஆசிர்வதியுங்கள் என்றாராம். ஆனால் அதற்கு ரஜினி கூறிய வார்த்தைகளைக் கேட்டு முத்துராமன் பேச முடியாமல் திகைத்துப் போய் விட்டாராம். அப்படி என்ன சொன்னார் ரஜினி.. உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்பதுதான் ரஜினி சொன்ன வார்த்தை....

அதேபோல லிங்குச்சாமியிடமும் மிகத் துணிச்சலாக படம் எடுத்துள்ளீர்கள் என்று பாராட்டினாராம் ரஜினி.

விரைவில் கமல்ஹாசனும் இப்படத்தைப் பார்க்கவுள்ளாராம்.
Close
 
 

Post a Comment