கார்த்தியுடன் பிரியாணி போடும் வெங்கட் பிரபு

|

Venkat Prabhu Prepare Briyani With Karthi
இயக்குனர் வெங்கட் பிரபு கார்த்தியை வைத்து பிரியாணி என்ற பெயரில் புதிய படம் ஒன்றை எடுக்கிறார்.

கிரிக்கெட் பெட்டிங் பற்றி தல அஜீ்த் குமாரை வைத்து மங்காத்தா எடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார். தனது புதிய படத்திற்கு பிரியாணி என்று பெயர் வைத்துள்ளார். பிரியாணி-எ வெங்கட் பிரபு டயட் என்று தலைப்பில் வரவிருக்கிறது.

இந்த படத்திலும் அவரது தம்பி பிரேம்ஜி அமரன் நடிக்கிறார். வழக்கம் போல இம்முறையும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை, சக்தி சரவணன் தான் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கிற்கு பிரவீண் கே.எல். ஆக மொத்தம் வெங்கட் பிரவுடன் பணியாற்றும் அதே குழு தான் இந்த படத்திலும் ஒன்று சேர்கிறது.

பிரியாணி வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும். சூர்யாவுடன் 3டி படம் பண்ண ஒப்புக் கொண்டாலும் வெங்கட் பிரபு முதலில் கார்த்தியுடன் தான் பணிபுரியவிருக்கிறார். மும்பையைச் சேர்ந்த முன்னணி நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
Close
 
 

Post a Comment