வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு விலக நினைத்தேன் என்று இயக்குனர் எழில் கூறினார். 'மனம் கொத்திப் பறவை' படத்தை இயக்கி தயாரித்துள்ள எழில் படம் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை 6 படங்கள் இயக்கி இருக்கிறேன். ஏழாவது படத்துக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரிய இடைவெளி ஏற்பட்டது. சினிமாவை விட்டு விலகி சொந்த ஊருக்கு போய்விடலாம் என்று நினைத்தபோதுதான், என் நண்பர்கள் அம்பேத்குமார், ரஞ்சீவ் மேனன் ஆகியோர் நாம் இணைந்து சொந்தப் படம் எடுப்போம் என்றார்கள். அவர்களோடு கிராமத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையை நகைச்சுவை கலந்த திரைக்கதையாக அமைத்தேன். அதுதான் இந்தப் படம். சிவகார்த்திக்கேயன், ஆத்மிகா ஜோடி. காமெடிக்கு இடையில் மெல்லிய காதலை சொல்லியிருக்கிறேன். பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இருக்கிறது. இதுவரை வில்லனாக நடித்த ரவிமரியா முதன் முறையாக காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தை பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள். ஆஞ்சநேயா பிக்சர்ஸ் எம்.சதீஷ் படத்தை வெளியிடுகிறார். இவ்வாறு எழில் கூறினார்.
Post a Comment