அழகில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது: ஸ்ரேயா

|

None Can Beat Me Beauty Shreya Saran   
அழகில் தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கில் பிசியாக இருந்த நடிகை ஸ்ரேயா சரண் தற்போது வாய்ப்புகள் இன்றி உள்ளார். இந்நிலையி்ல அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து ஸ்ரேயா கூறுகையில்,

நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்பது மிகவும் முக்கியம். ஒரு காலத்தில் அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்ததால் நிறைய படங்களில் நடித்தேன். பெரிய, பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தேன். ஆனால் தற்போது எனக்கு நேரம் சாதகமாக இல்லை. இருப்பினும் அதிர்ஷ்டம் மீண்டும் வரும் என்று நம்புகிறேன். அழகில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது.

அண்மையில் சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிந்து புகைப்படங்கள் எடுத்தேன். அந்த புகைப்படங்களைப் பார்த்து அடடா நான் இவ்வளவு அழகா என்று வியந்தேன். அந்த புகைப்படங்களைப் பார்த்த நிறைய பேர் இத்தனை அழகை எங்கே ஒளித்து வைத்திருந்தாய் என்று வியந்து கேட்டனர்.

கடந்த 2001ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானபோது எப்படி இருந்தேனோ தற்போதும் அப்படியே தான் உள்ளேன். அண்மையில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டேன். மேடையில் நான் நடந்து வந்தபோது கிடைத்த கைதட்டல்களை என்னால் மறக்க முடியாது என்றார்.
Close
 
 

Post a Comment