'ஹோம் ஸ்வீட் ஹோம்' என்ற ஆங்கில படத்தில் நடிக்க இருப்பதாக நீது சந்திரா கூறினார். தமிழில் 'யாவரும் நலம்', 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இவர் இப்போது அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக, 'ஆதி பகவன்' படத்தில் நடித்து வருகிறார். இவர், கிரேக்க இயக்குனர் கிரியகோஸ் டோபாரிடிஸ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் ஆங்கிலம் மற்றும் கிரீஸ் மொழியில் தயாராகிறது. சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் இந்திப் பட இயக்குனர் அனுராக் காஷ்யபை சந்தித்தார் கிரியகோஸ். அப்போது தான் இயக்கப் போகும் படத்துக்காக, இந்திய நடிகை ஒருவரை தேடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். இதையடுத்து அனுராக், நீதுவின் பெயரை பரிந்துரைத்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி தினகரன் நிருபரிடம் நீது சந்திரா கூறியதாவது: அனுராக்தான் இந்தப் படத்துக்காக என்னை பரிந்துரை செய்தார். 'ஹோம் ஸ்வீட் ஹோம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 8-ம் தேதி சைப்ரஸில் தொடங்குகிறது. இதற்காக 7-ம் தேதி அங்கு செல்கிறேன். என்னுடன் இரண்டு கிரீக் நடிகர்களும் ஒரு ஹாலிவுட் நடிகரும் நடிக்கிறார்கள். ரொமான்டிக் காமெடி படமான இதன் ஷூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
Post a Comment