பவர்ஃபுல் அம்மா... குஷ்பு சில சுவாரஸ்யங்கள்!

|

Successful Carrier Successful Life Kushboo
கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட சீசன் 7,’ ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என சின்னத்திரையில் மீண்டும் பிஸியாகிவிட்டார் குஷ்பு. பெரிய திரையோ, சின்னத்திரையோ அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சின்னத்திரையில் வெற்றிகரமான நடிகையாக இருக்கும் குஷ்புவைப் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘ருத்ரா’ தொடரோடு நடிப்பிற்கு ப்ரேக் விட்டிருந்த குஷ்பு மீண்டும் சின்னத்திரையில் படு பிஸியாகிவிட்டார். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ நெடுந்தொடரின் கதை, தயாரிப்பு, நடிப்பு என பிஸியாக இருந்தாலும் குழந்தைகள் அவந்திகா, அனந்திகா ஆகியோரின் ப்ரெண்டிலியான அம்மாவாம் குஷ்பு.

குழந்தைகளுக்காக 6 மணிக்கு மேல் சூட்டிற்கு போவதில்லை. அவர்களுக்கு ஹோம் ஒர்க் சொல்லித்தருவதில் இருந்து அனைத்து வேலைகளையும் கவனித்துக்கொள்வது குஷ்புதானாம். ஞாயிறுக்கிழமை கோடி ரூபாய் கொடுத்தாலும் சூட்டிங் கிடையாது என்பதை பாலிசியாக வைத்திருக்கிறார்.

அரசியல், சின்னத்திரை, சினிமா என பரபரப்பாக இருந்தலும் குஷ்பும், கணவர் சுந்தரும் கேரியர் பற்றி வீட்டில் பேசுவதே இல்லையாம். குடும்பம், குழந்தைகள் பற்றி மட்டுமே பேசுவதுதான் அவர்கள் வாழ்க்கையின் சக்சஸ்சிற்கு காரணமாம்.

இந்த ஆண்டிற்கான பவர்புல் அம்மாக்கள் வரிசையில் குஷ்புவையும் சேர்த்திருக்கலாமோ?.
Close
 
 

Post a Comment