சோனாக்ஷி வேண்டாமே: ஷாஹித், ரன்பீர் கபூர்

|

Ranbir Kapoor Shahid Kapoor Believe
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுடன் ஜோடி சேர ரன்பீர் மற்றும் ஷாஹித் கபூர் தயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா சல்மானின் தபாங் படம் மூலம் பிரபலமானவர். முதல் படத்தில் 40களில் இருக்கும் சல்மானோடு நடித்தார். அடுத்ததாகவும் சல்மானுடன் ஒரு படம், 40 களில் இருக்கும் அக்ஷய் குமாருடன் 3 படங்களில் நடிக்கவிருக்கிறார். இப்படி அவர் நடிக்கும் படங்கள் எல்லாவற்றிலும் வயது அதிகமுள்ளவர்கள் ஹீரோக்களாக உள்ளனர்.

தன்னை விட வயதில் மூத்த ஹீரோக்களுடன் நடிப்பது வசதியாக உள்ளது என்று சோனாக்ஷி எந்த நேரம் சொன்னாரோ தெரியவில்லை இளம் ஹீரோக்களான ரன்பீர் கபூர் மற்றும் ஷாஹித் கபூர் ஆகியோர் சோனாக்ஷி தங்களுடன் நடித்தால் வயது அதிகமானவர் போன்று தெரிவார் அதனால் எங்கள் படங்களில் அவர் வேண்டாமே என்று கூறுவதாக பேச்சு அடிபடுகிறது.

ஷாஹித் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பது சோனாக்ஷிக்கு தெரிந்ததால் தான் வேட்டை ரீமேக்கில் ஷாஹிதுக்கு ஜோடியாக நடிக்க அவர் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. லூத்தேரா என்ற படத்தில் மட்டும் தான் அவர் இளம் ஹீரோவான ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார்.

விட்டுத்தள்ளுங்க சோனாக்ஷி. வித்யா பாலன் ஷாஹித்துடன் கிஸ்மத் கனக்ஷனில் நடித்தபோது இப்படித் தான் கூறினார்கள். இப்பொழுது பாலிவுட்டில் இருக்கும் அனைத்து ஹீரோக்களும் வித்யாவுடன் நடிக்க ஆசைப்படுகிறார்களல்லவா.
 

Post a Comment