அருள்நிதி ஜோடியாக நடிக்கிறேன் என்று பூர்ணா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் நான் நடித்த 'சட்டக்காரி', தெலுங்கில் 'அவனு' படங்கள் விரைவில் ரிலீசாகின்றன. ஜெய் ஜோடியாக நடித்த 'அர்ஜூனன் காதலி' படத்தில் ஒரு பாடல் காட்சி பாக்கி இருந்தது. அதுவும் முடிந்துவிட்டது. 'கருவாச்சி', என்னை வேறொரு கோணத்தில் ரசிகர்களிடம் அடையாளப்படுத்தும். தோற்றம், மேனரிசம், உடைகள் போன்ற விஷயங்களில் வித்தியாசம் தெரியும். இந்தப்படத்தின் போட்டோவை என் பெற்றோரிடம் காட்டியபோது, அவர்களால் நம்ப முடியவில்லை. இதையடுத்து அருள்நிதி ஜோடியாக நடிக்கிறேன். கணேஷ் விநாயக் இயக்குகிறார். தலைப்பு முடிவாகவில்லை.
Post a Comment