சத்யமேவ ஜெயதேவுக்காக கேரள விசிட் - மோகன்லால் வீட்டில் அமீர்கான்!

|

Aamir Khan Visits Mohanlal House
ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட 'சத்யமேவ ஜெயதே' டிவி நிகழ்ச்சியின் புரமோஷன் பணிகளில் பிஸியாகிவிட்டார் நடிகர் அமீர்கான்.

இதற்காக தனது சினிமா வேலைகளைக் கூட விட்டுவிட்டு நாடு முழுவதும் சுற்றி வருகிறார் அமீர் கான்.

நேற்று முன்தினம் சத்யமேவ ஜெயதேவுக்காக ஒருநாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றார். அப்போது கொச்சியில் உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டுக்கு திடீரென சென்றார்.

அமீர்கானை மோகன்லாலும், மலையாள நடிகர் திலீப்பும் வரவேற்றனர். மோகன்லால் வீட்டை அமீர்கான் சுற்றி பார்த்தார். மோகன்லால் பாதுகாத்து வைத்துள்ள பழங்கால பொருட்களை வியப்போடு பார்த்தார் அமீர்கான். பின்னர் மோகன்லால் - திலீப்புடன் விருந்தும் சாப்பிட்டார்.

பின்னர் நீண்ட நேரம் இருவரும் மலையாள மற்றும் இந்தி திரையுலகம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு அங்கிருந்து அமீர்கான் புறப்பட்டுச் சென்றார். அமீர்கானை காண மோகன்லால் வீட்டின் முன்னால் ஏராளமான ரசிகர்கள் திரண்டார்கள். அவர்கள் அனைவரையும் பார்த்து கையசைத்தபடி சென்றார்.

ராஜஸ்தான் முதல்வருடன் சந்திப்பு:

தனது பயணத்தின் அடுத்த நிகழ்ச்சியாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று சந்தித்தார் அமீர்கான்.

பெண் சிசுக் கொலைக்கு எதிராக தான் நடத்தும் நிகழ்ச்சி பற்றி அவரிடம் கூறிய அமீர்கான், ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சிசுக் கொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் அசோக் கெலாட் உறுதியளித்தார்.
 

Post a Comment