காதலை வெளிப்படுத்தும் ‘ ஆஹா என்ன பொருத்தம்’

|

Actor Suresh Hosting Aakha Enna Porutham
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதன் மற்றும் வியாழன் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "ஆஹா என்ன பொருத்தம் என்ற நிகழ்ச்சி தம்பதிகளுக்கான பிரத்யேக காதலை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. திரைப்படங்களில் காதல் கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் சுரேஷ் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.

காதலித்து திருமணம் செய்தவர்கள், சின்னத்திரை நடிகர்கள் என பலவிதமான ஜோடிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த வாரம் சின்னத்திரை நகைச்சுவை நடிகர்கள் ஈஸ்டர், உதய்குமார் மற்றும் வெங்கட்ராஜ் தம்பதி சகிதம் கலந்து கொண்ட பகுதி ஒளிபரப்பாகிறது.

`மீண்டும் காதலிக்க வாங்க' என்ற அடைமொழியை கொண்டுள்ளதற்கேற்ப நிகழ்ச்சியில் இடம் பெறும் கேள்விகளும், சுற்றுக்களும் அமைந்துள்ளன. இது தம்பதிகளுக்குள் மறைந்திருக்கும் காதலை மீண்டும் வெளிக்கொண்டு வர ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்றே கூறலாம்.

இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியிலும் மூன்று தம்பதிகள் கலந்து கொள்வர். நான்கு சுற்றுகளை கடந்து வெற்றி பெறும் ஒரு தம்பதியினர், இரண்டாவது தேன்நிலவாக இந்தியா அல்லது அயல்நாடு செல்லலாம்.
Close
 
 

Post a Comment