டிஸ்கவரியில் அசாதாரண கொண்ட மனிதர்களைத் தேடி ஒரு பயணம்!

|

Discovery Channel Stan Lee Super Humans Program
எந்த ஒரு நிகழ்ச்சியுமே வியப்பூட்டும் வகையில் இருந்தால் அது நேயர்களை கவரும். தமிழ் தொலைக்காட்சிகளில் அழுதுவடியும் சீரியல்களையும், வன்முறையை தூண்டும் சினிமாக்களையும் பார்க்க பிடிக்காதவர்கள் பேசாமல் டிஸ்கவரி, அனிமல் பிளானெட், ஹிஸ்டரி போன்ற சேனல்கள் பக்கம் சென்றுவிடலாம். ஒவ்வொரு நாளும் வித்தியாசமாய், புதிது புதிதாய் நிகழ்ச்சிகளை காணலாம். டிஸ்கவரி சேனலில் தமிழில் அற்புதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

முக்கியமாக டிஸ்கவரி தமிழ்சேனலில் ஒளிபரப்பாகும் `ஸ்டான் லீஸ் சூப்பர் ஹியூமென்ஸ்' நிகழ்ச்சி, அதீத சக்தி படைத்த மனிதர்களை திரைக்கு கொண்டு வருகிறது. நிகழ்ச்சியை வழங்கும் டேனியல் புரவுனிங் ஸ்மித், இந்த தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அரிய சக்திபடைத்த நான்கு மனிதர்களை தேடிச் சென்று ஆராய்கிறார். முடிவில் அத்தகைய அதீத சக்தி அவர்களுக்குள் இருப்பதற்கான காரண காரியங்களையும் நிகழ்ச்சியில் விவரிக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த மின்சார மனிதர் மனிதரை சந்தித்த டேனியல் அவரது கையில் பாத்திரத்தைக் கொடுத்து ஆம்லேட் போடுகிறார். மிக்சியை கொடுத்து ஜூஸ் போடுகிறார். தன்னுள்ளே மின்சாரத்தை கடத்தி பொருட்களை இயக்குவது ஆச்சரியம்தான். இவரைப் பற்றி சன் தொலைக்காட்சியின் நிஜம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பியிருந்தாலும் டிஸ்கவரியில் பார்த்தது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதேபோல் குரங்கு மனிதன், இரும்பு மனிதன என வியத்தகு மனிதர்களைத் தேடி சந்தித்து அவர்களின் அசாதாரணமான நிலைக்கான காரணத்தை விளக்குகிறார் டேனியல் சுவாரஸ்யமாக செல்லும் இந்த நிகழ்ச்சியை அனைத்து வயதினரும் கண்டு ரசிக்கலாம்.
Close
 
 

Post a Comment