நடிகர் சங்கத் தலைவராக சரத்குமார், செயலராக ராதாரவி, பொருளாளராக சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு!!

|

Sarath Unanimously Elected Nadigar Sangam President
நடிகர் சங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் நடிகர் சரத்குமார்.

செயலாளராக ராதாரவியும், பொருளாளராக வாகை சந்திரசேகரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. இந்த ஆண்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் ஏற்கெனவே பதவியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அதே பதவிகளுக்குப் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி ஒருமனதாக அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய கவிஞர் பிறைசூடன் அறிவித்துள்ளார்.

அதன்படி, தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும், பொருளாளராக கவிஞர் பிறைசூடனும் பதவி ஏற்கின்றனர். உப தலைவர்களாக விஜயகுமாரும், கேஎன் காளையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிம்பு, குயிலி, பாத்திமா பாபு உள்பட 24 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Close
 
 

Post a Comment