இணையத்தைக் கலக்கும் இளையராஜாவின் இசை முன்னோட்டம்!

|

Ilayaraaja S Neethaane En Ponvasant
இன்றைய தேதிக்கு இணையதளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்ட, பார்த்து ரசிக்கப்பட்ட, ஆசை தீர பாராட்டி எழுதிக் கொண்டாடப்படும் இசைக் கோர்வை நீதானே என் பொன்வசந்தம்தான்!

லண்டன் ஸ்டுடியோவில் புகழ்பெற்ற சிம்பொனி இசைக் கலைஞர்கள் மற்றும் தனது குழுவினர் 108 பேருடன் இளையராஜா நடத்திய இசை ராஜாங்கத்துக்கு ஒரு சாம்பிளாக இந்த இசைக் கோர்வையை நீதானே என் பொன்வசந்தம் இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளியிட்டுள்ளனர்.

ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஒலிக்கும் இந்த இசைக் கோர்வை, இசைஞானியின் புதிய இசைப் பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது.

இதுபோன்று இன்னும் சில இசைக் கோர்வைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு படத்தின் இசைக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் தரப்படும் படம், சமீப காலத்தில் நீதானே என் பொன்வசந்தமாகத்தான் இருக்கும். தெலுங்கிலும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த இசை.



ரூ 2.50 கோடிக்கு இதன் வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனத்துக்கு தரவிருப்பதாகத் தெரிகிறது.

இளையராஜாவின் இசை அபிமானிகளுக்கு இது மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக உள்ளது. குறிப்பாக இந்தத் தலைமுறை ரசிகர்கள் இளையராஜா இசையை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்!
Close
 
 

Post a Comment