''ஆவிகளுக்குப் பிரியமானவள்'': மூட நம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள்

|

Sundra Travels Radha New Television Serial
சில காலம் பேய், பூதம், ஆவி போன்ற மர்ம தொடர்களை ஒதுக்கி வைத்திருந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் மீண்டும் அவற்றை கையில் எடுத்திருக்கின்றன.

சிவசங்கரி (சன் டிவி), ருத்ரம் (ஜெயா டிவி) ஆகிய ஆவி தொடர்கள் வரிசையில் தற்போது புதிதாக பைரவி (சன் டிவி) சேர்ந்திருக்கிறது.

பாம்பு பற்றி ஒரு காலத்தில் தொடர்கள் அதிகம் வெளிவந்த நிலையில் மீண்டும் டிஆர்பி ரேட்டிங்கிற்காக இப்போது ஆவி, பேய், சாமி என கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

பைரவி என்ற தொடர் தற்போது ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் கதாநாயகியாக நடித்திருப்பவர் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராதா. இதில் கதாநாயகியின் அம்மாவாக பெரியதிரையின் முன்னாள் கதாநாயாகி ஊர்வசி நடித்திருக்கிறார்.

கதாநாயகியின் கண்களுக்கு மட்டுமே ஆவி தெரிகிறதாம்! அவருக்கு மட்டுமே அந்த அபூர்வ சக்தி இருக்கிறதாம்! அவர் அந்த ஆவிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்கிறாராம்.

சிறுவர்கள் உதறலோடு இந்த தொடரை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரிகம நிறுவனம் இந்த நெடுந்தொடரை தயாரித்துள்ளது. சண்முகம் இயக்கியுள்ளார். இது போன்ற தொடர்களை ஒளிபரப்புவதன் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள் என்ன சொல்ல வருகின்றனர் என்பது தெரியவில்லை.
 

Post a Comment