தொலைக்காட்சிகளில் சுவையான சூட்டிங் ஸ்பாட்!

|

Sun Tv Cinima News
சன் டிவியில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் சினிமா செய்திகள் சினிமா ஆர்வலர்களுக்கு சற்று வித்தியாசமான நிகழ்ச்சிதான்.

சாதாரண செய்திகளை பார்த்தவர்களுக்கு இந்த சினிமா செய்திகள் ஹாலிவுட் திரைப்படம், சூட்டிங் ஸ்பாட், கேசட் வெளியீடு, பட பூஜை, என கலவையாக, சுவாரஸ்யமாக இருக்கும். இன்றைய நிகழ்ச்சியில் ‘பீட்ஸா’ படத்தின் சூட்டிங் ஸ்பாட் பற்றி இன்றைய சினிமா செய்திகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள்.

பீட்ஸா டெலிவரி மேன் வேடம் ஹீரோ விஜய சேதுபதிக்கு, கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ( ரொம்ப நாளாக ஒரு சந்தேகம், கதாநாயகனோ, கதாநாயகியோ முதன்முதலாக ஒரு படத்தில் நடித்தால் அறிமுகம் என்று போடுகிறார்கள். அதே இயக்குநர் முதன் முதலாக ஒரு படத்தை இயக்கினால் ஏன் அறிமுகம் என்று போடுவதில்லை?) அதான் கார்த்திக் சுப்புராஜ்க்கு அறிமுக இயக்குநர் பட்டம் நாம் அளித்துவிட்டோம்.

சூட்டிங் போக அவ்வளவு அவசரம் இந்த படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் பீட்ஸா திரைப்படம் ஒரு ரொமான்டிக் திரில்லர் என்று மட்டுமே பேசினார். ஹீரோ விஜய சேதுபதி ஏற்கனவே தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பதால் அவரைப்பற்றி அதிகம் அறிமுகம் தேவையில்லை. ஹீரோயின் ரம்யா நம்பீசனும் அவருடைய பங்கிற்கு படத்தைப்பற்றி விளக்கம் அளித்தார். சூட்டிங் ஸ்பாட் பார்ப்பதெல்லாம் சிலருக்கு போர் அடிக்கக் கூடிய விசயம் அதையே சினிமா செய்திகள் நிகழ்ச்சியில் சுவாரஸ்யமாக வழங்குகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

தொகுப்பாளியின் பேச்சும் நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமூட்டும் வகையில் உள்ளது.

சினிமா ஆர்வலர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு சினிமா செய்திகள் பார்க்கலாமே.
Close
 
 

Post a Comment